ஐக்கிய தேசிய முன்னணியினால் அமைக்கப்பட்டுள்ள புதிய முன்னணியின் பெயரினை ‘ஜனநாயக தேசிய முன்னணி’ என மாற்ற ஐக்கிய தேசிய முன்னணிக் கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முதலில் ‘தேசிய ஜனநாயக முன்னணி’ என்ற பெயரினை வைக்க தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசிய முன்னணியினால் கடந்த காலி முகத்திடல் பேரணியில் உரையாற்றும் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் குறித்த புதிய முன்னணி பெயரிடப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
