ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பு மனு பட்டியலிலுள்ள அனைத்து இராணுவ வேட்பாளர்களையும் விலகிக்கொள்ளுமாறு தாய்நாட்டிற்கான இராணுவ அமைப்பு கேட்டுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு கோரப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இராணுவத்தினரை தரக்குறைவாக கருதிய ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொள்வதற்கு இராணுவத்தினருக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை.
இராணுவ குடும்பங்களிடமிருந்து வாக்குகளை பெற்றுக்கொள்வது குறித்து சிந்திக்க வேண்டாம் எனவும் அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
(riz)