ஐக்கிய தேசிய கட்சியின் வேட்புமனுவானது வரும் திங்கட்கிழமை (13) கையளிக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், கடந்த மூன்று நாட்களாக வேட்புமனுவில் கையெழுத்திடும் வேலையை முன்னெடுத்திருந்ததாக தெரிவித்த அவர் இதுவரை மாவட்ட மட்டத்தில் தொகுதி அமைப்பாளர்கள் அனைவரும் வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இம்முறை தேர்தலில் இலஞ்சம், ஊழல் மற்றும் பாரிய குற்றச்சாட்டுக்கள் அற்ற குழுவினரை ஐக்கிய தேசிய கட்சி சார்பாக தேர்தலில் நிறுத்தியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(riz)