ஐக்கிய தேசிய கட்சியில் பதவி நிலைகளில் உள்ள அனைவரும் நாளைக்கு(07) முன்னர் விலகிக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறித்த கட்சியின் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாளை(07) மற்றும் நாளை மறுதினம்(08) கட்சி மறுசீரமைப்பு தொடர்பாக ஆராயும் கூட்டம் இடம்பெறவுள்ளது. அதன்போது புதிய நியமனங்கள், தெரிவுகள் குறித்து கவனம் செலுத்தப்படுமென ஸ்ரீகொத்த தலைமையக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஐக்கிய தேசிய கட்சியின் மறு சீரமைப்புக்கு ஏதுவாக கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம், தவிசாளர் மலிக் சமரவிக்ரம, பொருளாளர் எரான் விக்ரமரட்ன ஆகியோர் தமது பதவிகளிலிருந்து இராஜினாமா செய்வது தொடர்பான கடிதங்களை நேற்று(05) பிரதமரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
###