ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நகர சபை உறுப்பினர்கள் சிலர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து புதிய கட்சியுடன் இணைய தீர்மானித்துள்ளனர்.
அதன்படி, மட்டக்களப்பு,காத்தாங்குடி ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நகர சபை உறுப்பினர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் பத்தரமுல்லை நெலும் மாவத்தையிலுள்ள முன்னாள் ஜனாதிபதியினது அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களை சந்தித்து தாம் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது பிறந்த தினம் நவம்பர் மாதம் 18ம் திகதி கொண்டாடப்படவுள்ளதோடு, கூட்டு எதிர்க்கட்சியினர் அரசியல் வியாபாரத்தினை அந்நாள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அரசியல் வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

