எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடுவது தொடர்பில் காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்தன, துறைமுக மற்றும் கப்பல்த்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, கலாசார விவகார அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க ஆகியோர் கவனம் செலுத்திவருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்களது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுடன் இவர்கள் கலந்தாலோசித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(riz)