ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தை மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிப்பதற்கு கட்சித் தலைமைகளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க இத்தகவலை வெளியிட்டார்.
தேசிய அரசாங்கத்தை அமைக்கும் பொருட்டு ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு குறித்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.