ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவை ஒன்று சேர்ந்து அதிகளவு அதிகாரத்தினை கைப்பற்றிய உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தினை பலப்படுத்துவோம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.
பொதுஜன பெரமுன முன்னணி அநேக இடங்களில் வெற்றி பெற்றாலும் பெரும்பான்மை இல்லாத பகுதிகளில் எதிரணியின் பெரும்பான்மையினை காட்டி அதிகாரத்தினை பெற முடியும் தானே என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நேற்று(21) பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய அரசு குறித்த இரு கட்சிகளையும் வைத்து உருவாகியமையினால் உள்ளூராட்சி மன்றங்களது அதிகாரப் பகிர்வு குறித்து இரு பிரதான கட்சிகளிடையே ஒரு முரண்பாடு அல்ல எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
#rishma