ஐ.தே.கவின் பிரதிப் பொதுச் செயலாளராக ருவன் விஜேவர்தன நியமனம்…

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளராகவும், அமைச்சர் சாகல ரத்நாயக்க, கட்சியின் உள்ளக நடவடிக்கைக்குப் பொறுப்பான செயலாளராகவும் கட்சியின் செயற்குழு நியமித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், கட்சியின் தலைமையமான சிறிகொத்தாவில், நேற்று(24) இரவு இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தின் போதே, குறித்த இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்போது, எதிர்வரும் தேர்தல்களை எதிர்கொள்வதற்காக முறையான வேலைத் திட்டமொன்றைத் தயாரிக்கும் பொறுப்பு, அமைச்சர் கபீர் ஹசீமுக்கு வழங்கப்பட்டுள்ள அதேவேளை, இந்த வேலைத்திட்டத்தை, கட்சியின் அதிகாரிகள் சபையில் முன்வைத்து, பின்னர் செயற்குழுவிடம் சமர்ப்பித்து அனுமதி பெறப்பட வேண்டுமெனவும், யோசனை முன்வைக்கப்பட்டது.

அத்துடன், கம்பெரலிய வேலைத்திட்டத்தை, வெற்றிகரமான முன்னெடுக்கும் முறைமை தொடர்பிலும், இதன்போது தீர்க்கமாக ஆ​ராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.