ஐ.தே.க தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதியிடமிருந்து ஆதரவு

இம்முறை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் சுதந்திர கட்சி உறுப்பினர்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவு வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய அமைச்சர் ராஜித சேனாரத்னவின் களுத்துறையில் அமைந்திருக்கும் வீட்டிற்கு நேற்று சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரின் எதிர்காலத்தை பாதுகாப்பதாக அவரின் ஆதரவாளர்களிடம் அங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ராஜித சேனாரத்ன உட்பட குழுவினர் கூட்டணியில் இருந்து விலகி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கினார்கள்.

அவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியவர்கள் தற்போது ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(riz)