ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் அனைவருக்கும் இன்று அழைப்பு..

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் அனைவரும் இன்று(03) கொழும்பில் ஒன்று கூடவுள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தவில் குறித்த இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

#reeshma