ஐ.தே.க. யின் மறுசீரமைப்பு பணிகள் எதிர்வரும் ஐனவரி 05 முதல்..

உள்ளூராட்சி சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி 05 ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளதாக அக்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, சகல பிரதேச செயலக பிரிவுகளையும் அடிப்படையாகக் கொண்டு கீழ் மட்ட ரீதியில் கட்சியை மறுசீரமைக்குமாறு கட்சியின் தலைவரும் பிரமருமான ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.