ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சிறிகொத்தவில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று(26) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் புதிய உறுப்பினர் சபைக்கான அனுமதி பெற்றுக் கொள்ளப்பட உள்ளது.
இன்றைய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் சமர்பிப்பதற்காக புதிய உறுப்பினர் சபைக்கான பெயர்கள் நேற்று(25) இடம்பெற்ற அரசியல் சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதன்போது புதிய உறுப்பினர் சபைக்கான பெயர்கள் முன் வைக்கப்பட்டதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ கூறினார்.