ஐ.தே.க.வில் இணையவுள்ள பொன்சேகா – புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்து

ஜனநாயக் கட்சியின் தலைவர், முன்னாள் ராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளார்.

இது தொடர்பான வைபவம் இன்று மாலை மூன்று மணியளவில் முக்கிய பிரமுகர்களின் பங்கேற்புடன் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.

இதன்போது சரத் பொன்சேகா மற்றும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு இடையில் புரிந்துணர்வு அரசியல் ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்படவுள்ளது.

இன்னும், ஜனநாயகக் கட்சியின் சார்பில் சரத் பொன்சேகாவும், ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் ரணில் விக்ரமசிங்கவும் இதில் கைச்சாத்திடவுள்ளனர்.

இதன் பின்னர் எதிர்வரும் 09ம் திகதி சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.