ஐ.தே.க. 25 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எதிர்த்­த­ரப்பு வரி­சையில் ?

ஐக்­கிய தேசி­யக் ­கட்­சியின் 25 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எதிர்­வரும் 22 ஆம் திகதி எதிர்க்­கட்சி வரி­சையில் அமரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி உறுப்­பி­னர்கள் அமைச்­சுப்­ப­த­வி­களைப் பெற்று அரசு தரப்பில் அமர்­வதால் இந்த நிலை ஏற்­பட்­டுள்­ள­தே ஒழிய வேறு காரணங்கள் ஏதும் இல்லை எனவும் தெரியவருகிறது