ஐக்கிய நாடுகள்; செயலாளர் பான் கீ மூன் நேற்று முன்தினம் மைத்திரிபாலவுடன் தொலைபேசியில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.
இதன்போதே மைத்திரிபால தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
செப்டம்பர் கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக கடுமையான அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் செப்டம்பரில் புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டவுடன் தாம் ஜெனீவாவுக்கு செல்லவுள்ளதாக ஜனாதிபதியை கோடிட்டு ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது பான் கீ மூன் அரசாங்கத்தின் சமாதான முனைப்புக்களை பாராட்டியதாகவும் ஜனாதிபதி அலுவலகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது