சிறுவர் துஷ்பிரயோகத்தைக் கட்டுப்படுத்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தை ஐக்கியநாடுகள் சபை பாராட்டியுள்ளது.
சமீபத்தில் சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் குழு தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இதில் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையின் திட்டத்தை வரவேற்றுப் பேசினார்கள்.
தெருவில் வாழும் பிள்ளைகளுக்கான விசேட வேலைத்திட்டங்கள், சிறுவர் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக குடும்பக்கட்டமைப்பை உறுதிமிக்கதாக மாற்றுதல், விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுத்தல் போன்றவை பற்றி குறித்த கூட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.