ஐ.நா. புதிய பொதுச்செயலாளராக போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் அந்தோனியோ குத்தேரஸ் பதவியேற்றுக் கொண்டார்.
அவருக்கு தற்போதைய பொதுச் செயலாளர் பான் கீ மூன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஐக்கிய நாடுகள் அவையில் தற்போதைய பொதுச் செயலாளராக தென்கொரியாவைச் சேர்ந்த பான் கி மூன் பதவி வகித்து வருகிறார்.
கடந்த 10 ஆண்டுகளாக இந்த பொறுப்பு வகிக்கும் பான் கி மூனின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 31-ம் திகதியுடன் நிறைவடைகிறது.
இதைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க கடந்த ஜூலை முதல் பல்வேறு கட்டங்களாக ரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் அவையின் அகதிகள் முகமையின் தலைவராகப் பதவி வகிக்கும் குத்தேரஸ், ஐ.நா. அவையின் 9ஆவது பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் திகதி வரை பதவி வகிப்பார்.