ஐ.நா பொதுச்சபையில் வடகொரியாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை..

ஐ.நா. பொதுசபையில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரியா அணுஆயுத சோதனைகளை நிறுத்தாவிட்டால் அந்நாட்டை முழுமையாக அழிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் அதிபராக தேர்வு செய்யப்பட்ட டொனால்ட் டிரம்ப் முதல் முறையாக நேற்று(19) ஐ.நா. சபையில் உரையாற்றினார். இதன்போதே வடகொரியாவிற்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடகொரியா குறித்து பேசிய டொனால்டு டிரம்ப், “வடகொரியாவின் பொறுப்பற்ற அணு ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் ஒட்டுமொத்த உலகத்திற்கே அச்சுறுத்தலாக அமைகிறது எனவும் வடகொரியாவின் இந்த செயல்கள் தன்னையும் மற்றும் தன்னுடைய பிராந்தியத்தையும் அழித்துக்கொள்வதற்கு வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்காவை மிரட்டினால், வடகொரியாவை முற்றிலும் அழிப்பதை தவிர்த்து எங்களுக்கு வேறு வழி இல்லை,” என்று தெரவித்துள்ளார்,