ஐ.நா பொதுச் சபையில் ஜனாதிபதி இன்று உரை..

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் சபையின் 72வது பொதுக்கூட்ட அமர்வில் இன்று(19) உரையாற்றவுள்ளார்.

உலக நாடுகளின் அரச தலைவர்களின் ஒன்றிணைந்த அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்கால பயணம் குறித்து இதன் போது விரிவாக ஆராயப்படவுள்ளது.

இதில் இலங்கையின் அரசியல் நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ளார்.

மேலும் ஐக்கிய நாடுகளின் பொருளாதாரம் சிவில் அமைப்புகளின் கூட்டத்தொடரிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.