ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக நாட்டை வந்தடைந்தார்.
அரசாங்கத்தால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவர் இங்கு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தது.