ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பதவியில் நீடிக்கும் வாய்ப்பை மறுத்து விலகுகிறார் ஹுஸைன்..

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல்-ஹுஸைன், தனது பதவியிலிருந்து அடுத்தாண்டு விலகவுள்ளார்.

இன்னுமொரு பதவிக்கால நீடிப்பைக் கோராமலேயே, அவர் விலகவுள்ளாரென அவரது தரப்பு தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

ஜோர்தானைச் சேர்ந்த இளவரசரும் முன்னாள் இராஜதந்திரியுமான ஹுஸைன், 2014ஆம் ஆண்டு செம்டம்பர் 1ஆம் திகதி, தனத பதவியை ஏற்றிருந்தார். ஒரு பதவிக் காலம், 4 ஆண்டுகளைக் கொண்டது என்பதோடு, இரண்டு தடவைகள் பதவி வகிக்க முடியும்.

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட, அரச தலைவர்கள் பலருடனும் முரண்பட்டுக் கொண்ட ஹுஸைன், பூகோள அரசியல் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, இரண்டாவது தடவையாகப் பதவி வகிப்பதற்கெதிரான முடிவை எடுப்பதாக அறிவித்துள்ளார்.

தனது முடிவை, தனது அலுவலக அதிகாரிகளுக்கு, மின்னஞ்சல் மூலமாக அவர் அனுப்பி வைத்துள்ளார்.

#reeshma..