ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து தாம் விலகுகின்றோம் என்ற அறிவிப்பை அமெரிக்கா வெளியிடவுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி வட்டாரங்கள் தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இன்று(06) இதற்கான சமிக்ஞையை அமெரிக்கா வெளியிடவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இஸ்ரேலுக்கு எதிரானதாகக் காணப்படுகின்றது. இதன் காரணமாக சீர்திருத்தங்கள் அவசியம் என அமெரிக்கா கருதுகின்றது என இராஜதந்திரிகளும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இஸ்ரேல் குறித்து கடும் நிலைப்பாட்டை எடுத்ததன் காரணமாக ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் ஆட்சிக்காலத்தில் அதிலிருந்துஅமெரிக்கா விலகியதும், பின்னர் பராக் ஒபாமா காலத்தில் இணைந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.