ஐ.நா. மனித உரிமைப் பேரவை தீர்மானம் தொடர்பில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியினால் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள குறித்த கோரிக்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ம் திகதி இந்த விவாதத்தை நடத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானம் நாட்டின் இறைமைக்கு மிகவும் முக்கியமானது எனவும் இது குறித்து பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட வேண்டுமெனவும் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.