ஐ.ம.சு.மு விஷேட சந்திப்புக்கு மஹிந்தரின் வருகை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேர்தல் செயற்பாட்டுக் குழுவின் விஷேட சந்திப்பொன்றுக்காக,  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்திற்கு
மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் வருகை தந்துள்ளார்.

இச்சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் கலந்து கொள்ளவுள்ளன.

எதிர்வரும் பொதுத் தேர்தல் குறித்த முக்கிய தீர்மானங்களை மேற்கொள்வதே இச்சந்திப்பின் நோக்கம் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் (14) ஜனாதிபதி செயலகத்தில் விஷேட உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்கியதில் தனக்கு உடன்பாடில்லை எனவும், அவருக்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் கூறியிருந்தார்.

அத்துடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாரபட்சம் இன்றி நடுநிலை வகிக்கப் போவதாகவும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, அவசர ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நேற்று நடத்திய ஸ்ரீ லங்கா சுதந்தரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ஜனாதிபதியின் இந்த கருத்து குறித்து கவலை வெளியிட்டார்.

அத்துடன் இன்று அக் கட்சியின் மத்திய செயற்குழு விஷேட சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(riz)