(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மேளனத்தை எதிர்வரும் 03ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்ட நிலையில் கட்சியின் சம்பிரதாயத்துக்கு அமைய இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது.
இந்த மாநாடு கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் ஒக்டோபர் 03 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு இடம்பெறும் என, தற்போது நடைபெற்றுவரும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.