எதிர்வரும் ஒக்டோபர் 6 ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள தேசிய உணவு உற்பத்தி மறுமலர்ச்சி வாரத்தை, வெற்றிகரமாக நிறைவேற்ற அனைத்து மாவட்ட செயலாளர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று(26), கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், நிறுவன ரீதியிலான பொறுப்புக்களை வழங்கும் வகையிலான சுற்றுநிருபம் தற்போது வௌியிடப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் நாட்டில் ஏற்படுத்தியுள்ள கடும் வறட்சி, வௌ்ள நிலைமைகள் காரணமாக, வீழ்ச்சியடைந்துள்ள விவசாயத்தில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, விவசாயிகளின் பொருளாதாரம் மற்றும் நாட்டின் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொருட்டு இந்த வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்