வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நேற்று நடைபெற இருந்த பரீட்சைகள் அனைத்தும் மாகாணம் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்ற நிலையில், இப்பரீட்சைகள் அனைத்தும் எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.
கஜா புயலின் தாக்கம் காரணமாக, வடக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய, நேற்று சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறை தொடர்பில், ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று ஆளுநர் செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.