கடந்த 17ஆம் திகதி ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்ட, பிணைமுறி தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் இன்று(25) மீளவும் ஆரம்பமாகவுள்ளன.
பெப்பர்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பெற்றுக் கொண்ட குரல் பதிவு, மற்றும் ஆவணங்கள் உள்ளிட்ட சாட்சியங்களை சமர்ப்பிக்க அவகாசம் தேவை என, சட்டமா அதிபர் திணைக்களம் கோரியிருந்தது.
குறித்த அந்தக் கோரிக்கைக்கு அமைய சாட்சி விசாரணைகள் தள்ளி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)