ஒன்றிணைந்தோரது பால் பக்கட் கதை தொடர்பில் ஜேவிபி அலசல்…

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் ஏற்பாட்டில் கடந்த 05ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ‘மக்கள் சக்தி கொழும்பிற்கு’ எதிர்புப் பேரணியில் கலந்து கொண்டிருந்த ஆதரவாளர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரால் நஞ்சு கலந்த பால் பொதிகள் வழங்கப்பட்டதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததமையானது, எதிர்ப்புப் பேரணியானது தோல்வியில் முடிவடைந்ததை மூடி மறைக்கவே என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

குறித்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

மேலும், அவர் தெரிவிக்கையில் மக்கள் விடுதலை முன்னணியும் அதிகளவான எதிர்ப்புப் போராட்டங்களை அரசுக்கு எதிராக மேற்கொண்டிருந்த போதிலும் இவ்வாறான பால் பெக்கட் சம்பவங்கள் இடம்பெறவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.