எதிர்வரும் செப்டம்பர் 05 ஆம் திகதி ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் கொழும்பில் ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்க்கட்சி குழுவாக ஆதரவளிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(23) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.