வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளரால் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பெயரைக் குறிப்பிட்டு வௌியிடப்பட்ட ஊடக அறிக்கை குறித்து இன்று பிரதமருடன் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதில் அமைச்சர் கயந்த கருணாதிலக்க, பிரதி அமைச்சர் கரு பரணவிதாரன மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் நிமல் போபகே ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
அண்மையில் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளரால் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தொடர்பில் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டது.
பின்னர் ஏற்பட்ட சர்சைகளை தொடர்ந்து, குறித்த அறிக்கை செயலாளரின் கோரிக்கையே தவிர அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல என, வெகுஜன ஊடகத்துறை மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.