முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக, நீதிமன்ற உத்தரவை மீறி ரீகல் திரையரங்குகிற்கு முன்னாலிருந்து கோட்டைக்கு பாதயாத்திரையாக வந்த கூட்டு எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 8 பேருக்கு எதிராக சபாநாயகர் மூலம் நோட்டீஸ் அனுப்புமாறு பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள் கொழும்பு கோட்டை நீதவான் திருமதி. லங்கா ஜயரத்ன நிராகரித்துள்ளார்.
அன்றைய தினம் குறித்த பாதயாத்திரை நடத்த வேண்டாம் என நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவு, குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சரியான முறையில் வழங்கப்படாமை மற்றும் ஒலிபெருக்கி மூலம் மாத்திரம் குறித்த உத்தரவு அறிவிக்கப்பட்டமை ஆகிய காரணத்தினால் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தவறு செய்திருப்பின், அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது