மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரத்தை பகிரங்கப்படுத்தியதன் காரணமாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(22) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மத்திய வங்கியின் பிணை முறி விவகாரத்தில் முக்கிய விடயமொன்றை வெளியிட்டமைக்காக அனீகா என்ற சாட்சியாளருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதற்காக அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், குறித்த இந்த விடயத்தை ஆரம்பம் தொட்டு பகிரங்கப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர்கள் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகும்.
இதனால், தற்போது அவர்களுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்விடயத்தில் தலையிட்டு ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் பந்துல குணவர்த்தன வலியுறுத்தியுள்ளார்.
(rizmira)