ஒன்றிணைந்த எதிர்கட்சியின் வேலைகள் கசக்கிறது.. நான் அரசியலை விட்டும் விலகுகிறேன்.. – ஜோன் செனவிரத்ன…

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் உள்ள சிலரின் கருத்துக்கள் மற்றும் நடவடிக்கைகளினால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த நிலை சுமுகமாகாதாவிடத்து தான் அரசியலில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் சிலர் இடத்திற்கு இடம் சென்று பல்வேறு பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும், குறித்த நிலைமையானது எதிர்பார்க்க நல்லதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தான் இறுதி வரையில் போராடுவேன், அவ்வாறு செய்ய முடியாதுவிடத்து தான் அரசியலில் இருந்து விலகுவேன் என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.