ஒன்றிணைந்த பொதுஜன முன்னணியின் உருவாக்கம் குறித்த யோசனை இன்று(10)…

ஒன்றிணைந்த பொதுஜன முன்னணியின் உருவாக்கும் யோசனையானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று(10) மாலை 05.00 மணிக்கு கொழும்பு 07 விஜேராம மாவத்தையில் அமையப் பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் குறித்த கட்சியின் தலைமைக் கூட்டத்தில் தன்னால் முன்வைக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்களுக்கு முகங்கொடுக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒன்றிணைந்த பொதுஜன முன்னணி உருவாக்கப்படும் எனவும், அது குறித்த கொள்கை அறிக்கையானது விரைவில் நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.