ஒபரேஷன் தியேட்டரில் கிட்டார் வாசித்த நோயாளி

பிரேசில் நாட்டை சேர்ந்த அந்தோணி குல்காம்ப் டியாஸ்(33) என்பவருக்கு ஏற்பட்ட புற்று நோய்க்கட்டியை அகற்ற கடந்த வாரம் மூளை பகுதியில் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

20 அண்டுகளாக கிட்டார் வாசித்து வரும் இவருக்கு நடத்தப்பட்ட இந்த அறுவை சிகிச்சையின் போது, அவரது மூளையின் செயல்பாடுகளை நவீன கருவிகளின் மூலம் கண்காணிக்க வைத்தியர்கள் முடிவு செய்தனர்.

இதை அந்தோணியிடம் அவர்கள் தெரிவித்தபோது, இதற்கு முழுமனதுடன் சம்மதித்த அவர், அறுவை சிகிச்சையின் போது கிட்டார் வாசிக்க தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

வைத்தியர்களும் அதற்கு சம்மதம் தெரிவிக்க, அன்று அந்த ஒபரேஷன் தியேட்டர் கிட்டார் இசை கச்சேரி மேடையாக மாறியது.

ஒபரேஷன் தியேட்டரில் உள்ள கட்டிலில் படுத்தபடியே, வைத்தியர்கள் மண்டை ஓட்டை அகற்றி மூளையை ஆராய்ந்து, கட்டியை அகற்றிக் கொண்டிருக்க, பிரபல மேற்கத்திய இசைக்குழுவான ‘பீடில்ஸ்’ குழுவினர் வாசித்த ஆறு சூப்பர் ஹிட் பாடல்களையும், தனது மகனுக்காக இசையமைத்த தாலாட்டு பாடலையும் இசைத்து வைத்தியர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளார்.
pp

Untitled-2