ஒபாமாவின் மகளை திருமணம் செய்ய 90,000 அமெரிக்க டாலர் வரதட்சணை

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மூத்த மகள் மலியாவை திருமணம் செய்துகொள்ள, 150 பண்ணை விலங்குகளை வரதட்சிணையாகத் தரத் தயாராக இருப்பதாக கென்யா நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞ்சர்  ஃபெலிக்ஸ் கிப்ரோனோ (24) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
”நான் மலியாவை பணத்துக்காக காதலிப்பதாக மக்கள் கூறலாம். ஆனால் என்னுடைய காதல் உண்மையானது. கடந்த 2008-ஆம் ஆண்டிலிருந்து அவரை நான் காதலித்து வருகிறேன். என் காதல் குறித்து எனது பெற்றோரிடமும் தெரிவித்தேன். அவர்களும் வரதட்சணை அதிகமாக தரத் தயாராக இருக்கின்றனர்.

எதிர்வரும் ஜூலை மாதம் கென்யாவுக்கு அமெரிக்க அதிபர் வர இருக்கிறார். அப்போது அவரது மகளையும் உடன் அழைத்து வர வேண்டுமென்று கடிதம் எழுதி வருகிறேன்” என்றார் ஃபெலிக்ஸ் கிப்ரோனோ.

ஃபெலிக்ஸ், பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சட்ட மேற்படிப்பு பயின்று வருகிறார். இவர், மலியாவை திருமணம் செய்ய 90,000 அமெரிக்க டாலர் மதிப்புக்கு ஆடுகள், பசுக்கள் போன்ற பண்ணை விலங்குகளை வரதட்சிணையாக தரத் தயாராக இருப்பதாக மேலும் தெரிவித்துள்ளார்.