ஒபாமா பற்றி ட்விட்டரில் ஜோக் வெளியிட்ட இஸ்ரேல் அமைச்சரின் மனைவி பகிரங்க மன்னிப்பு

இஸ்ரேல் நாட்டு உள்துறை அமைச்சர் சில்வன் ஷாலோமின் மனைவி ஜூடி ஷாலோம் நிர்-மோசஸ். தனது டுவிட்டர் பக்கத்தில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பற்றி ஜோக் ஒன்றை வெளியிட்டார்.

அதாவது; ஒபாமாவின் காபி பற்றி உங்களுக்கு தெரியுமா? அது கருப்பு மற்றும் வீக்கானது என்று ட்வீட் செய்தார் இதற்கு பல தரப்பில் இருந்து கண்டனம் எழுந்த நிலையில் ஜூடி தனது ட்விட்டை நீக்கி விட்டு டுவிட்டரில் ஒபாமாவிடம் மன்னிப்பு கேட்டார்.

மேலும் அவர் யாரோ என்னிடம் கூறிய முட்டாள்தனமான ஜோக் அது. நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ஜூடி. இஸ்ரேலில் அதிகம் விற்பனையாகும் எடியட் அஹாரோனட் எனும் நாளிதழை வெளியிடும் மோசஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் .

அவர் அந்நாட்டு வானொலியில் வாராந்திர நிகழ்ச்சியை நடத்துவதுடன் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.