(ஃபாஸ்ட் நியூஸ் | தென் ஆப்பிரிக்கா) – ஒமிக்ரோன் கொவிட் வைரஸ் மீதான பயம் காரணமாக தனது மனைவி மற்றும் குழந்தைகளை ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் மாறுபாடு இந்தியா உட்பட பல நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. இதன் காரணமாக உலகளாவிய ரீதியில் பரவலைக் கட்டுப்படுத்த விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாரிகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கல்யாண் பூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில், தடயவியல் பேராசிரியராக பணிபுரிந்து வந்த சுஷில் சிங் (வயது 55) என்பவர் தனது மனைவி சந்திரபிரபா (வயது 50), மகன் ஷிகார் சிங் (வயது 21), மகள் குஷி சிங் (வயது 16) ஆகியோரை கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
கொலை செய்து தப்பியோடுவதற்கு முன்பு, இது குறித்து தனது சகோதரருக்கு பேராசிரியர் குறுந்தகவல் ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளதாகவும்,அதில் ‘ஒமிக்ரோன் மாறுபாட்டில் இருந்து யாரும் காப்பாற்றப்பட மாட்டார்கள்’. எனவே அனைவரையும் விடுவிக்கின்றேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.