(FASTNEWS|COLOMBO) – யாழ்ப்பாணத்தில், 2393 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகள் மற்றும் புகையிலையுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – மண்டைதீவு சந்தியில் இடப்பட்டுள்ள வீதித் தடுப்பில் லொறியொன்றை சோதனைக்குட்படுத்தியபோதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதன்போது, 44 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த 1359 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகளும் 31 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த 1034 கிலோகிராம் புகையிலையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.