(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019ம் ஆண்டு கல்வியாண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையில் செயன்முறைப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் அடுத்த வாரம் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் செயற்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இதுவரையில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க விசேட கருமபீடம் திறக்கப்பட்டுள்ளது.
அலுவலக நேரங்களில் மாணவர்களுக்காக 0115-226-115 என்ற அவசர தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.