பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான யூனுஸ்கான் ஒருநாள் போட்டிகளில் இருந்து திடீர் ஓய்வு பெற்றதன் காரணம் குறித்து தற்போது விளக்கமளித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான யூனுஸ்கான், கடந்த நவம்பர் மாதம் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென்று அறிவித்தார்.
இந்த நிலையில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது குறித்து யூனுஸ்கான் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தன் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்றும், ஒருநாள் போட்டிக்கு ஏற்ற வீரராக தன்னை கருதவில்லை எனவும் தெரிவித்த அவர்,
தாம் திடீரென ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை என்றும், தலைமை பயிற்சியாளர் வாக்கர் யூனுசுக்கு இதுகுறித்து தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.
சீனியர் வீரரான தன்னை தெரிவு குழுவினர் ஒரு பொருட்டாக மதித்தது இல்லை என வருத்தம் தெரிவித்த அவர்,
தாம் ஏற்கனவே ஓய்வு பெற விரும்பி இருந்ததாகவும், உலகக்கிண்ண ஆட்டங்களில் போதுமான வாய்ப்பு வழங்காததால் இந்த முடிவினை எடுக்க நினைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது டெஸ்டில் மட்டுமே விளையாடி வருவதாக தெரிவித்த யூனுஸ்கான், அதுவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது என்றார்.
இதனால் சரியான தருணத்தில் டெஸ்டில் இருந்தும் ஓய்வு பெற இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.