தமது நாட்டில் இடம்பெறவுள்ள 2019ம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிகளுக்கு தயாராகும் வகையில் இலங்கை அணியுடன் எதிர்வரும் 10ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒருநாள் போட்டிகள் மிகவும் முக்கியமானது என இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கன் நேற்று(03) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.
அவ்வாறே சங்கக்கார, மஹேல மற்றும் மேத்யூஸ் இல்லாத அணியானது பிறிதோர் சவாலாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார்.
“நாம் இலங்கையில் 2014ம் ஆண்டு கலந்துகொண்ட போட்டிகளில் இலங்கை அணியில் சங்கக்கார, மஹேல மற்றும் மேத்யூஸ் ஆகியோர் விளையாடினார்கள். அது வித்தியாசமான ஒரு அணியாகும். இம்முறை பிறிதோர் அணி போன்றே வித்தியாசமான சவாலாகும் ” என தெரிவித்துள்ளார்.