ஒருநாள் போட்டித் தொடரினையும் கைப்பற்றியது இந்திய அணி..

இலங்கை எதிர் இந்திய அணிகளுக்கு இடையிலான 3 வது சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 217 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 45.1 ஓவர் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 218 ஓட்டங்களை குவித்தது.

ஷர்மா 122 ஓட்டங்களையும், தோனி 67 ஓட்டங்களையும் பெற்றனர்.

தனஞ்செய 38 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அந்த வகையில் 5 போட்டிகளை கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் இந்திய அணி 3 க்கு 0 என்ற வகையில் முன்னிலையில் உள்ளது.

 

(rizmira)