(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
தேசிய ஒருமித்த அரசாங்கம் அமைக்கப்பட்டால் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்க முடியாது என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருமித்த அரசாங்கத்தின் கீழ் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் பல முன்மொழிவுகள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்தகைய அரசாங்கத்தின் கீழ் பாராளுமன்றத்தில் பின்வரிசை உறுப்பினர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.