(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -உலகை அச்சுறுத்திவரும் கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் முடக்கத்தில் இருப்பதால் ஒரு இ லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்குச் சம்பளத்தை நிறுத்தியது டிஸ்னி நிறுவனம்.
உலகின் மிகப்பெரிய பொழுது போக்கு நிறுவனமான டிஸ்னி, குறிப்பாக அமெரிக்கா ஐரோப்பா மற்றும் ஆசியாவில் விடுதிகளையும் பொழுதுபோக்கு பூங்காக்களையும் நடத்திக் கொண்டிருக்கிறது.
சம்பளம் தரப்படாத ஊழியர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்குவதாகவும் அமெரிக்காவில் வாழ்பவர்கள் அமெரிக்க அரசு வழங்கும் உதவித் தொகையைப் பெற உதவுவதாகவும் தெரிவித்துள்ளது.