சுமார் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹஷீஸ் போதைப்பொருளுடன் கட்டுகஸ்தொட்ட பகுதியை சேர்ந்த 37 வயதான நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது செய்யப்பட்ட நபர் சென்னையில் இருந்து இன்று(01) காலை இலங்கை வந்துள்ளார்.
அவரின் பயணப்பையை சுங்க அதிகாரிகள் சோதனை செய்த போதே சுமார் ஒரு கிலோ கிராம் ஹஷீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.