ஒரு கோடி பெறுமதியான தங்க நகைகளுடன் இருவர் கைது…

(FASTNEWS|COLOMBO) – சட்ட விரோதமான முறையில் தங்க நகைகளை இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட நோர்வே நாட்டை சேர்ந்த இருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 1 கோடியே 10 இலட்சம் ரூபா பெறுமதியான 1 கிலோ 825 கிராம் எடையுடைய தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைப்பற்றப்பட்ட நகைகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன் குறித்த இருவருக்கும் 6 இலட்சம் ரூபா தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.