ஒரு கோடி விற்பனை… TVS XL சூப்பரின் ஸ்பெஷல் எடிசன்!

விற்பனையில் ஒரு கோடி என்ற இமாலய விற்பனை சாதனையை TVS XL சூப்பர் மொபட் தொட்டிருக்கிறது. இதனை கொண்டாடும் விதத்தில் புதிய மாடலை TVS மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
புதிய ஸ்டிக்கர் டிசைன் மற்றும் கூடுதல் ஆக்சஸெரீகள் கொண்டதாக புதிய மாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன், இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலில் ஒரு கோடி விற்பனை என்பதை குறிப்பதற்கான சின்னமும் பொறிக்கப்பட்டிருக்கும்.

TVS XL சூப்பர் மொபட்டில் 3.5 HB பவரையும், 5 NM டார்க்கையும் வழங்கும் 70CC 2 ஸ்ட்ரோக் எஞ்சின் உள்ளது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட இந்த மொபட் லிட்டருக்கு 71 கி.மீ மைலேஜ் தரும் என TVS தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

(riz)